திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (18:32 IST)

தமிழக மாணவர்களை பாதிக்குமா உச்சநீதிமன்ற தீர்ப்பு? - மருத்துவ நுழைவுத் தேர்வு அவசியம்

இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த ஆண்டிலிருந்தே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
 

 
இந்திய அளவில் மருத்துவ கல்லூரியில் சேருவதற்கு ஓரே மாதிரியான நுழைவு தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. காரணம் நாடு முழுவதும் ஓரே மாதிரியான கல்வி திட்டம் இல்லாத நிலையில், எந்த கல்வி திட்டத்தின் அடிப்படையில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.
 
அதற்கு மத்திய அரசு ஏற்கனவே மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் பின்பற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்ட முறையிலேயே நுழைவு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியா முழுவதும் சிபிஎஸ்சி பாடத்திட்டம் இல்லை. மாறாக ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு பாடத்திட்ட முறையை பின்பற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவு தேர்வு நடைபெறும் போது, ஒரு குறிப்பிட்ட பகுதியினர் அதாவது அதாவது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் படிப்பவர்கள் மட்டுமே (வசதி படைத்த ஒரு பிரிவினர் மட்டுமே) அதில் வெற்றி பெற முடியும். மற்ற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பின்தங்குவார்கள்.
 
குறிப்பாக தமிழக கிராமங்களில் பயின்று வரும் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். எனவே நாடு முழுவதும் ஓரே மாதிரியான பாடத்திட்ட முறையில்லாத நிலையில் ஓரே மாதிரியான பொது நுழைவு தேர்வு நடத்தது சமூக நீதிக்கு எதிரானது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்த்து வந்தது.
 
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இளநிலை மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நடத்த உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் இந்த ஆண்டிலிருந்தே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...