திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 மே 2023 (13:07 IST)

நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கர் படம் திறப்பு: 25 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு..!

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் பூஜை இன்று காலை நடந்த நிலையில் சற்று முன் இரண்டாம் கட்ட திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 
இதில் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டது. இந்த படத்திற்கு மலர் தூவி பிரதமர் மோடி மரியாதை செய்தார். மேலும் பல்வேறு மாநில முதல்வர்கள் சாவர்க்கர் பட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர் என்பதும் பிரதமர் மோடி சாவர்க்கர் பட திறப்பு விழாவுக்கு வருகை தந்த போது கரகோஷத்துடன் தொடர் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிகழ்ச்சியில் 25 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர் என்பதும் 19 கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva