ஒரே ஒரு ஏ.சிக்கு ரூ.36 கோடி லஞ்சமா? சசிகலா சிறையின் பரபரப்பு தகவல்


sivalingam| Last Modified செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (22:33 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு எந்தவிதமான சிறப்பு சலுகைகளும் கொடுக்கப்படவில்லை என்றும், அவர் மற்ற கைதிகள் போலவே நடத்தப்பட்டு வருவதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 


இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் மேல் மட்டத்தில் உள்ள தலைவர்களிடம் சசிகலா தரப்பினர் பேசியதாகவும்,  கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் நிதியாக, 36 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு பிரதிபலனாக சசிகலா இருக்கும் சிறை அறையில் ஏ.சி., வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத நிலையில் இந்த தகவலை சிறை அதிகாரிகள் மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிறை விதிகளை மீறி சசிகலாவை கூடுதல் எண்ணிக்கையில் பார்வையாளர்கள் சந்தித்து வருவதாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமை மூலம் தகவலை பெற்ற நிலையில் தற்போது இந்த ஏசி தகவல் மிக வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :