செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 17 மே 2017 (19:12 IST)

ஒரே பெண்ணை திருமணம் செய்யும் பல ஆண்கள் கொண்ட வினோத கிராமம்

மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா என்ற கிராமத்தில் அண்ணன், தம்பிகள் ஒரே பெண்களை திருமணம் செய்துக் கொள்ளும் சம்பவம் நடைப்பெற்று வருகிறது.


 

 
மத்திய பிரதேசத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மோரேனா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆண், பெண் எண்ணிக்கை சமநிலையில் இல்லாத காரணத்தினால் வினோதமான பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். 
 
அண்ணன் மற்றும் தம்பி இருவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்துக் கொள்கின்றனர். சில பெண்கள் ஒர் ஆணுடன் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். 6 முதல் 8 ஆண்களை திருமணம் செய்துக்கொண்ட பெண்களும் உள்ளனர். 
 
இந்தியாவில் பல இடங்களில் இதுபோன்ற விசித்திர முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சில மக்களிடம் இதுபோன்ற திருமண முறை இருப்பதாக கூறப்படுகிறது.