1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 22 மே 2017 (12:56 IST)

விக்-குடன் தலை தெறிக்க ஓடிய சாமியார்: வைரல் வீடியோ!!

டெல்லியில் நாதுராம் கோட்சேயின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சாமி ஓம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். 


 
 
தொலைக்காட்சிகளில் பெண்களை இழிவாக பேசி அடிவாங்கியவர் சாமி ஓம். இப்படி இருக்கையில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்ததற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 
 
எனவே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். விழா மேடையில் பேசுவதற்கு சென்ற சாமி ஓம் அங்கு இருந்த சிலரால் தாக்கப்பட்டார். 
 
அப்போது சினிமாவில் போலி சாமியார்கள் விக்குடன் காட்சி அளிப்பதுபோன்று, சாமி ஓம்மின் விக்கும் கழண்டுவிட்டது. 
 
அடி தாங்க முடியாத சாமியார் விக்குடன் ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.