1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2017 (21:48 IST)

சச்சின் பாடிய நச்சோ நச்சோ பாடல்! இணையதளத்தில் வைரலோ வைரல்

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் கிட்டதட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மிக விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது.



 


இந்த நிலையில் சமீபத்தில் சச்சின் 100எம்.பி ., என்ற் மொபைல் அப்லிகேஷனை தனது ரசிகர்களுக்காக வெளியிட்டார். இந்த அப்ளிகேஷனின் புரமோஷன் பாடல் ஒன்றை அவரே பாடியுள்ளார். சச்சின் மற்றும் பாலிவுட் பாடகர் சோனு நிஜாம் ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடலின் டீசர் தற்போது இணையதளத்தின் வைரலோ வைரல் ஆகியுள்ளது.

கிரிக்கெட், நடிப்பு மட்டுமின்றி பாடகர் அவதாரத்திலும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் சச்சின் என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த பாடலின் யூடியூப் வீடியோ லிங்க் வேண்டுமா! இதோ ....https://www.youtube.com/watch?time_continue=65&v=tVn6c8u6P1I