2036ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்தது! – சபரிமலை ஷாக்கிங் தகவல்!
கேரளாவில் உள்ள சபரிமலையில் பிரபலமான படி பூஜையில் கலந்து கொள்ள 2036ம் ஆண்டு வரைக்கும் முன்பதிவு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் மாலை போட்டு சென்று வழிபடுவது வழக்கம். கொரோனா குறைந்துள்ள நிலையில் 45 ஆயிரம் பக்தர்கள் தினசரி ஐயப்பனை வழிபட சபரிமலை நிர்வாகம் அனுமதித்துள்ளது.
இதுதவிர ஐயப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடாக படிபூஜை இருந்து வருகிறது. மாலை நேரத்தில் சன்னிதானம் செல்லும் 18 படிகளிலும் விளக்கேற்றி செய்யப்படும் வழிபாடு இது. இந்த வழிபாட்டை காண சிலருக்கு மட்டுமே முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது.
படிபூஜையை காண முன்பதிவு செய்ய ரூ.40 ஆயிரம் வசூல் செய்யப்படும் நிலையில் அடுத்த 2036ம் ஆண்டு வரை படிபூஜைக்கு பலர் முன்பதிவு செய்துள்ளதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.