வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2016 (09:24 IST)

ரூபாய் நோட்டு தடையால் அமோகமாக நடைபெறும் பாலியல் தொழில்!

ரூபாய் நோட்டு தடையால் அமோகமாக நடைபெறும் பாலியல் தொழில்!

500, 1000 ரூபாய் நோட்டுகள் தடையால் கொல்கத்தாவில் உள்ள சிகப்பு விளக்கு பகுதியான சோனாகாச்சியில் பாலியல் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இது தெற்கு ஆசியாவின் புகழ்பெற்ற சிகப்பு விளக்கு பகுதியாகும்.


 
 
நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து அதற்கான மாற்று பணத்தை புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளாக பெறலாம் என கூறினார். ஆனால் ஒரு வாரத்திற்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்கள் அறிவித்துள்ளனர்.
 
இதனால் அவர்களின் தொழில் அமோகமாக நடைபெறுவதாக அங்குள்ள பெண்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள் பெறும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக தர்பார் மற்றும் உஷா வங்கிகள் உறுதி அளித்திருப்பதகவும் அந்த பெண்கள் கூறுகின்றனர்.
 
இந்த உஷா வங்கி பாலியல் தொழில் செய்யும் பெண்களால் அவர்களுக்காக தொடங்கப்படும் வங்கியாகும். பொதுவாக பாலியல் தொழிலாளர்கள் பணத்தை வங்கியில் போடாமல் கையில் வைத்திருக்கும் பழக்கம் உடையவர்கள். வழக்கமாக இந்த வங்கியில் பாலியல் தொழிலாளர்களால் ஒரு நாளைக்கு 5 லட்சம் ரூபாய் டெபாசிட் ஆகும். ஆனால் கடந்த இரண்டு தினங்களாக 50 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.