1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (15:28 IST)

பெட்ரோல் விலை ரூ.8 உயருகிறதா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 100 நாட்களுக்கு மேல் உயராமல் இருக்கும் நிலையில் விரைவில் ரூபாய் 8 வரை உயரும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் அது மட்டுமின்றி உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் பதட்டம் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உச்சத்திற்கு சென்று உள்ளது என்பதும் தெரிந்ததே.
 
 ஆனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் பெட்ரோல் விலை உயராததால் பெட்ரோல் விற்பனையாளர்கள் கடுமையான பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
 
எனவே ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் முதல் கட்டமாக ரூபாய் 8 பெட்ரோல் விலை உயரும் என்றும் அதன்பிறகு படிப்படியாக உயரும் என்றும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது