ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்காததற்கு ஜாதிதான் காரணமா?

Last Updated: புதன், 12 ஜூன் 2019 (14:27 IST)
ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என நகரி தொகுதியின் எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். 
 
ஆந்திராவில் மொத்தமுள்ள் 175 சட்டப்பேரவை தொகுதியில் நடந்த தேதலில் 151 தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கடந்த முறை ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 
 
முதலில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி பதவியேற்றார். அதன் பின்னர் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 
ஆனால் அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ஆந்திர முதல் முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்துக்கொள்ள வந்த நடிகை ரோஜாவிடம் அமைச்சர் பதவி வழங்காதது குறித்து கேட்கப்பட்டது. 
 
அதற்கு அவர், அமைச்சர் பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. ஆனால், கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :