வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (00:01 IST)

வங்க கடலில் ரோபோட்டுகள்

மழை, புயல் போன்ற வானிலை குறித்து அறிய வங்க கடலில் தண்ணீருக்கு அடியில் ரோபோட்டுகள் அமைக்கப்பட உள்ளன.


 

 
மழை வருவதை துல்லிய மாக கணிக்க இந்தியா இங்கிலாந்து விஞ்ஞானிகள் இணைந்து வங்க கடலில் தண்ணீருக்கு அடியில் ரோபோட்டுகள் அமைக்கின்றன. இதன் மூலம் கடலில் ஏற்படும் புயல், காற்றழுத்த தாழ்வு நிலையை துல்லியமாக கணித்து மழை பெய்யும் தன்மையை  கண்டறிய முடியும். 
 
இதற்கான பணிகளை வங்காள விரிகுடா படுகை ஆய்வகம் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்து தேசிய கடல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளும் ஈடுப்பட்டுள்ளனர்.
 
ரோபோட்டுகள் மூலம் இந்தியாவில் மழை மற்றும் புயல் குறித்து குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமான தகவல் கிடைப்பதுடன் பருவ மழை காலத்தில் மழையின் அளவுக்கு குறித்தும் அறிய முடியும் என்பதால், இத்திட்டம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.