1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : புதன், 22 பிப்ரவரி 2017 (21:26 IST)

முன்பதிவு டிக்கெட் இருந்தால் மின்சார ரயிலிலும் பயணம் செய்யலாம். தெற்கு ரயில்வே

வெளிமாநிலங்களில் இருந்தோ அல்லது தென்மாவட்டங்களில் இருந்தோ அல்லது இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் சென்னைக்கு முன்பதிவு செய்து பயணம் செல்லும் பயணிகள் அதே டிக்கெட்டில் சென்னையில் உள்ள மின்சார ரயிலிலும் பயணம் செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.




இதுவரை முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தாலும் சென்னையில் இருந்து தாம்பரம் அல்லது அரக்கோணம் செல்வதாக இருந்தால் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இனிமேல் முன்பதிவு செய்த டிக்கெட் இருந்தால் போதும், அதே டிக்கெட்டில் எழும்பூர்-தாம்பரம், சென்ட்ரல்-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில்களில் பயணிக்கலாம்" என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.