அப்படி போடு அரிவாள! 'தன் தனா தன்' வடிவில் வாரி வழங்கும் ஜியோ

sivalingam| Last Updated: புதன், 12 ஏப்ரல் 2017 (08:52 IST)
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இந்தியாவில் அறிமுகமாகி இலவச டேட்டா, இலவச அழைப்புகள், இலவச எஸ்.எம்.எஸ் என வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சம்மர் பிளான் நீட்டிப்பிற்கு டிராய் தடை விதித்தாலும் அசராமல் ஜியோ புதிய வடிவில் கிட்டத்தட்ட அதே ஆஃபரை அள்ளி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு தன் தனா தன் என்று பெயரை அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.309 அல்லது ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்யலாம். பிரைம் வாடிக்கையாளராக இல்லாதவர்கள் அல்லது புதிய வாடிக்கையாளர்கள் ரூ.408 மற்றும் ரூ.608-க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்

ரூ. 309-க்கு ரீசாஜ் செய்யும் பிரைம் வாடிக்களையாளர்கள் தினசரி 1 ஜிபி டேட்டாவும், ரூ. 509-க்கு ரீசாஜ் செய்யும் பிரைம் வாடிக்களையாளர்கள் தினசரி  2 ஜிபி டேட்டாவும் பெறுவார்கள்.

அதேபோல் ரூ.408 ( 309+99)-க்கு ரீசாஜ் செய்யும் நான்- பிரைம் வாடிக்களையாளர்கள் நாள் ஓன்றுக்கு 1 ஜிபி டேட்டாவும், ரூ. 608 (509=99) -க்கு ரீசாஜ் செய்யும் நான்- பிரைம் வாடிக்களையாளர்கள் நாள் ஓன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் பெறுவார்கள்.

இந்த வசதியுடன் வழக்கம்போல் மூன்று மாதங்களுக்கு ஜியோவின் இலவச போன் கால்கள், குறுஞ்செய்திகள், ஜியோ ஆப்ஸ் என அனைத்து சேவைகளும் தொடரும். இந்த வசதியை பெற்றுக்கொள்ள வரும் 15-ம் தேதிக்குள், வாடிக்கையாளர்கள் இணைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :