1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (06:56 IST)

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை வாங்கியது ரிலையன்ஸ்: எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவின் முன்னணி நிறுவனமான  ஜஸ்ட் டயல் நிறுவனத்தை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது.
 
ஜஸ்ட் டயல் நிறுவனத்தை ரூ 3497 கோடிக்கு வாங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது
 
கடந்த ஜூலை மாதம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1020 ரூபாய் என 1.31 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கிய நிலையில் தற்போது மேலும் ஒரு பங்கின் விலை ரூ.1022 என்ற விலையில் 2.12 கோடிக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் தற்போது ரிலையன்ஸ் கைவசம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40. 98 சதவிகிதப் பங்குகளை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரிலையன்ஸ் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி இருந்தாலும் அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக வி.எஸ்.எஸ். மணியே தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.