1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 21 செப்டம்பர் 2015 (21:28 IST)

செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், ஏழுமலையானுக்கு ஆபத்து - சந்திரபாபு நாயுடு

செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று ஆந்திர முதல்வர் சச்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”செம்மரக் கடத்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது. செம்மரங்கள் அழிந்து வரும் இனம்; அதை காக்க வேண்டியது நம் கடமை.
 
சேஷாசலம் வனப்பகுதியில் கடத்தப்படும் செம்மரங்கள் பிறமாநிலங்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. மிகவும் மதிப்புமிக்க செம்மரங்கள் கடத்தப்படுவது ஜனந்ந்யக்த்திற்கு ஆபத்தாகும்.
 
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகும், செம்மரக் கடத்தல் தொடர்கிறது. செம்மரக் கடத்தலை தடுக்காவிட்டால், திருப்பதி வெங்கடாஜலபதிக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விடும்” என்று கூறியுள்ளார்.