திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 ஜூலை 2025 (17:03 IST)

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?
இந்திய ரிசர்வ் வங்கியில் தொடர்பு அலுவலர் பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 
 
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி தேதி:
ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்களை மும்பையில் உள்ள RBI Services Board-க்கு அனுப்ப வேண்டும். அத்துடன், அனைத்து ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பத்தின் மென் நகலை (soft copy) [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, மாலை 6 மணிக்குள் ஆகும்.
 
வயது வரம்பு: ஜூலை 1, 2025 நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 50 முதல் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பது கட்டாயம்.
 
அனுபவம்: பொதுத்துறை வங்கி அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் முன் அனுபவம் அவசியம்.
 
மாதாந்திர சம்பளம்: ரூ.1,64,800 முதல் ரூ.2,73,500 வரை 
 
மேலும் விவரங்களுக்கு RBI-யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவும்.
 
Edited by Siva