திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:31 IST)

இது எச்சரிக்கை மணிதான்; கண்டுக்காம விட்டோம்னா…! – எச்சரிக்கும் முன்னாள் ஆர்பிஐ கவர்னர்!

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 23.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ள நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் -23.9% ஆக சரிந்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெரும் சரிவை இந்தியா சந்தித்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பொருளாதார சரிவு குறித்து பேசியுள்ள முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் ”நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 23.9 சதவீதம் குறைந்துள்ளது. இது நாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என்பதை கருத்தில் கொண்டு இனியாவது அரசு தன்னிறைவில் இருந்து வெளி வந்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தில் அமைப்புசாரா துறையின் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது. கொரோனா வைரஸால் இத்தாலியில் கூட 12.4 சதவீதம்தான் பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்காவில் 9.5 சதவீதம். பொருளாதார வளர்ச்சிக்கு செலவு செய்ய அரசு தயக்கம் காட்டினால் அது தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.