1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By J.Durai
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (16:46 IST)

ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானர்.....

இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய தொழிலதிபரான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் தமது வயது 86-ல் 
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. 
 
அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த  ஞாயிற்றுக்கிழமை ரத்தன் டாட்டா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானபோது  அதை மறுத்த  ரத்தன் டாட்டா, தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருவதாகவும், 
வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்குச் சென்றிருப்பதாகவும் கூறினார்.
 
எனினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக,மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பல தகவல்கள்  வெளியாகின.
இந்நிலையில்,
சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.