மாநிலங்களவை எம்பியாகும் சோனியா காந்தி.! ஜெய்ப்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார்..!!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 27ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் செய்ய பிப்ரவரி 15 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களை எம்பியாக தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சோனியா காந்தியுடன், ராகுல் காந்தி, பிரியா காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
ராஜஸ்தானில் தற்போது 3 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ளன. எம்எல்ஏக்களின் அடிப்படையில் பாஜகவுக்கு 2 எம்பி சீட்டுகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி கிடைப்பது உறுதியாகி உள்ளது. அதன் அடிப்படையில்தான் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி வரும் மக்களைவை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை எனவும் தனது மகள் பிரியங்கா காந்தியை ரேபரேலி தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.