செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 2 அக்டோபர் 2018 (14:55 IST)

டெல்லி விவசாயிகள் பேரணியில் கண்ணீர் புகைகுண்டு மற்றும் தடியடி

உத்தரகாண்டில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் மீது போலீஸ் கண்ணீர் புகைகுண்டு மற்றும் தடியடி நடத்தியுள்ளனர்.

விவசாயக் கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  விவசாயிகள் ஹரித்வாரில் இருந்து செப்டம்பர் 23-ந்தேதி பேரணியாகப் புறப்பட்டனர்.

இந்த பேரணி பாரதிய கிஸான் சங்கத்தினரால் ஒன்றினைக்கப்பட்டது அமைதியான முறையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி வந்த அவர்களை டெல்லி உத்தரபிரதேச எல்லையில் காவல்துறை மடக்கியது.

விவசாயிகள் பேரணியால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அவர்களை முன்னேறி செல்லவிடாமல் டெல்லி காவல்துறை தடுத்தது. இதனால் வாகனங்களை விட்டு இறங்கி நடந்து செல்ல விவசாயிகள் முற்பட்டனர். கூட்டத்தை கலைப்பதற்காக காவல்துறை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தை விரட்டினர்.
இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விவசாயிகளை சந்த்திது அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளர்.