வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (12:01 IST)

ரயில் கட்டண நிர்ணயம்; தனியாருக்கு அனுமதி! –ரெயில்வே அமைச்சகம்!

நாடு முழுவதும் செயல்பாட்டில் வர உள்ள தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே தடங்களில் தனியார் நிறுவனங்கள் ரயில் இயக்குவதற்கான அனுமதியை விரைவில் மத்திய அரசு அளிக்க உள்ளது. நாடு முழுவதும் உள்ள 109 முக்கியமான தடங்களில் இந்த தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தனியார் ரயில்களுக்கான கட்டணத்தை அந்தந்த நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிதாக ரயில் சேவை தொடங்க உள்ள தனியார் நிறுவனங்கள் புதிய ரயில்கள் வாங்குவது, வாடைகைக்கு எடுப்பது போன்ற செயல்முறைகளிலும் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தனியார் ரயில் சேவைகளுக்கான கட்டணம் அரசு ரயில்களை விட அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.