வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (07:51 IST)

வீட்டு செலவை குறையுங்கள்: பெட்ரோல் விலையேற்றம் குறித்து அமைச்சர் கருத்து

பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக வீட்டு செலவை குறைத்து கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் அறிவுரை கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையேறி கொண்டே போவதால் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான முக்கிய பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ராஜஸ்தான் அமைச்சர் ராஜ்குமார் ரின்வா என்பவர் பெட்ரோல், டீசல் விலை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரையாக கூறியதாவது: மக்களுக்கு பெட்ரோல் விலை ஏன் உயர்ந்து வருகிறது என புரியவில்லை. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதாலும், சர்வதேச சந்தை காரணமாகவும் அவற்றின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வை சமாளிக்க பொதுமக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதனை புரிந்து கொண்டால் மக்களின் வாழ்க்கையில் குழப்பம் இருக்காது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் ரின்வாவின் இந்த கருத்து குறித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியபோது, 'அமைச்சர் ரின்வா கருத்து ஆணவம் மற்றும் மனிதத்தன்மை அற்றது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்