செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 டிசம்பர் 2017 (18:46 IST)

காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய ராஜ் தக்கரே ஆதரவாளர்கள்!!

இன்று காலை 10 மணியளவில் மும்பையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற ஒரு கும்பல், அலுவலகத்தை முற்றிலுமாக அடித்து நொறுக்கியது.
பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள்ளே நுழைந்த நபர்கள் கண்ணாடி மேசைகள்,சேர்கள் என கண்ணில் பட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மும்பை போலிஸார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இதனையடுத்து இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள மஹாராஸ்டிர நவ்ரிமன் சேனா(MNS) கட்சியினர் இது சர்ஜிகல் ஸ்டிரைக் என வெளிப்படையாக கூறியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மஹாராஸ்டிர முன்னாள் முதலமைச்சர், ஜனநாயக நாட்டில் இதுபோல் செய்வது தவறு என்றும் எண்ணங்கள் மற்றும் சித்தாந்தங்களில் உள்ள சண்டைகள்  வார்த்தைகளில் தீர்க்கப்பட வேண்டும், வன்முறையில் அல்ல என்று கூறியுள்ளார்.
 
இதனையடுத்து இந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.