வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 29 ஜூன் 2016 (12:14 IST)

எச்சரிக்கை! - அடுத்த மாதம் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு

வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவில் அதிக மழை பெய்யும் என்று எல்- நினோ தொடர்பான ஆய்வில் தெரிய வந்துள்ளது.


 
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்று ஏற்கெனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
 
தென்மேற்குப் பருவமழையானது, தொடக்கத்தில் பலவீனமாக இருந்தாலும் ஜூலை மாதத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று அது கூறியுள்ளது. இந்நிலையில், புனேவில் உள்ள வெப்பமண்டல வானிலை மையம், தனது எல்-நினோ தொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
 
இதிலும், ஜூலை மாதம் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூனில் எல்-நினோ சிதைந்து மழையும் குறைந்து இருக்கும். ஆனால் ஜூலை மற்றும் செப்டம்பரில் கனமழை பெய்யும் என்று அந்த ஆய்வு கூறியுள்ளது.
 
இதுதவிர, இந்திய வானிலை ஆய்வு மையமும் தனது வானிலை அறிக்கையை ஜூலை முதல் வாரம் வெளியிட உள்ளது. 142 ஆண்டுகளின் தரவுகளை கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் எல்-நினே சிதைவு இந்தியாவில் கோடைக்கால பருவமழையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி சி. ஞானசீலன் கூறியுள்ளார்.
 
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சராசரியை விட அதிகமான மழைப்பொழிவு இருக்கும் என்றும் செப்டம்பரில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ளார்.