புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2016 (19:52 IST)

எலிகளை ஒழிக்க மாதம் ரூ.35,000 ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு

லக்னோவில் உள்ள ரயில் நிலையத்தில் எலிகளை ஒழிக்க மாதம் ரூ:35,000 ஒதுக்கீடு செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது


 

 
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ரயில் நிலையத்தில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் அவற்றை ஒழிக்க மாதம் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
 
லக்னோவில் உள்ள சார்பாக் ரயில்நிலையத்தில் உள்ள அலுவலகங்களில் ரயில்வேத்துறைக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களும், கோப்புகளும் பெருமளவு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் கடந்த சில மாதங்களாக எலித்தொல்லை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.