1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (18:52 IST)

சிக்கன் சாப்பிடனும்..ஒரு வாரம் லீவு கொடுங்க - வைரல் லீவ் லெட்டர்

தனது வீட்டிற்கு சென்று சிக்கன் சாப்பிடுவதற்காக ஒரு வாரம் விடுமுறை வேண்டும் என ஒரு ரயில்வே ஊழியர் எழுதியுள்ள விடுமுறை கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரெயில்வே நிலையத்தில் பணிபுரியும் ஒரு ரயில்வே தொழிலாளி பங்கர் ராஜ், தனது மேலதிகரிக்கு ஒரு விடுமுறை கடிதம் எழுதியுள்ளார். 
 
அந்த கடிதத்தில் “விரைவில் ஷ்ரவன் மாத பண்டிகை துவங்க உள்ளது. அதனால் அந்த மாதம் முழுவதும் எங்கள் வீட்டில் அசைவ உணவுகளை சமைக்க மாட்டோம். எனவே, அதற்கு முன் சிக்கன் சாப்பிடுவதற்காக எனக்கு ஒரு வாரம் (ஜூன் 20 முதல் 27ம் தேதி வரை) விடுமுறை வேண்டும். அப்போதுதான் எனது உடலுக்கு தேவையன ஆற்றலைப் பெற்று உற்சாகமாக என்னால் வேலை செய்ய முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
 
அவரின் மேலதிகாரி அவருக்கு விடுமுறை கொடுத்தாரா? இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், அவரின் விடுமுறை கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.