புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (11:44 IST)

அவரு தான் அதுக்கு சரியா இருப்பாரு: ஸ்டாலினை முன்மொழிந்த முதலமைச்சர்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முன்னாள் திமுக தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்மொழிந்தார். இது தேசிய அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி மோடியை எதிர்க்கும் வலிமையும் திறமையும் ராகுலுக்கு இருக்கிறது. ஆகவே அவரே பிரதமர் வேட்பாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது எங்கள் கட்சியின் முடிவு என கூறினார்.