ராகுல்காந்தி பிறந்தபோது மருத்துவமனையில் அவரை கவனித்து கொண்டவர் இவர்தான்!

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (11:34 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு, உற்சாகமாக தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார். முதல்கட்டமாக தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதிக்கு சென்று அந்த தொகுதி மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மக்களோடு மக்களாக அவர் எளிமையாக, இயல்பாக இருந்தது அனைவரையும் கவர்ந்தது. மேலும் வயநாடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அவர் பஜ்ஜியும், டீயும் சாப்பிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்
இந்த நிலையில் டெல்லி மருத்துவமனையில் ராகுல்காந்தி பிறந்தபோது, அந்த மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணிபுரிந்த ராஜம்மாள் என்பவர்தான் ராகுல்காந்தியை கவனித்து கொண்டார். சோனியா காந்தி டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் வரை குழந்தையாக இருந்த ராகுல்காந்தி, ராஜம்மாள் கண்காணிப்பில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அந்த ராஜம்மாள் தற்போது ஓய்வு பெற்று வயநாட்டில் தான் இருப்பதாக ராகுல்காந்திக்கு தெரிய வந்தது. உடனே அவரை நேரில் சந்திக்க விரும்பிய ராகுல்காந்தி, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பு தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாகவும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :