ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (12:49 IST)

தனது முடிவில் சற்றும் மனம் தளராத ராகுல் காந்தி: மூத்த தலைவர்கள் சோகம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து தான் விலகுவதில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் பெரும் தோல்வியை தழுவியது. மேலும் காங்கிரஸிற்கு எப்பவும் கைகுடுக்க கூடிய அமேதி தொகுதியும் இந்த தேர்தலில் கைவிட்டு போனது.

இந்நிலையில் ராகுல் காந்தி, தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள், ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தொடரவேண்டும் என ஒரு மித்த குரல் எழுப்பிவந்தனர்.

ஆனாலும் தன்னுடைய முடிவில் சற்றும் மனம் தளராத ராகுல் காந்தி, தான் நிச்சயமாக தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என சோனியா காந்தி தலைமையில் இன்று காலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் ராகுல் காந்தி, தான் இந்த முடிவை குறித்து இனி எப்போதும் மறு பரீசீலனை செய்ய மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பெரும் வருத்தத்தில் இருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பிரியங்கா காந்தியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.