வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 27 டிசம்பர் 2019 (16:40 IST)

பழங்குடியினருடன் ராகுல் காந்தி நடனம் ; வைரலாகும் வீடியோ

சத்தீஸ்கர் மாநிலத்தில் தேசிய பழங்குடியின நடன விழா நடைபெறுகிறது. இந்த விழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் முன்னால் தலைவர் மற்றும் கேரள மாநிலம  வயநாடு எம்.பி பழங்குடியினாருடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, ராகுல் காந்தி, தலையில், சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்து உற்சாகமுடன் நடனம் ஆடினார்.அவருடன் சத்திஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகேல் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இணைந்து நடனம் ஆடினார்.
 
இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
 
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில்  நான் இன்று தேசிய நடன விழாவைத் துவங்கி வைக்கிறேன்.
 
இந்த தனித்துவமான விழாவானது மிகவும் முக்கியமானது, மற்றூம் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுக்காப்பதற்க்கான தொடக்கம் என தெரிவித்துள்ளார்