மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரானது - ராகுல் காந்தி

rahul gandhi
Ilavarasan| Last Updated: புதன், 29 ஏப்ரல் 2015 (19:54 IST)
மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியதால் பரபரப்பு நிலவியது.
தற்போது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், அரசியல் பணிகள் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் என்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார். இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், மோடி அரசு விவசாயிகளுக்கான அரசு அல்ல என்று கடுமையாக குற்றம் சாட்டினார்

சில நாட்களுக்கு முன்பு கேதார்நாத் மலைக் கோயிலுக்கு ராகுல் பாதயாத்திரை சென்றார். யாத்திரைக்கு காரணமாக அவர், கடந்த
2013 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் நடைபெற்ற இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்ததாக குறிப்பிட்டார்.

இதன் பின் விவசாயிகள் பிரச்னைகளைக் கேட்டறிவதற்காகப் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல், விவசாயிகளையும் பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். டில்லியில் இருந்து பஞ்சாப்பிற்கு சென்ற ராகுல், ரயிலில் பொதுப் பிரிவில் மக்களுடன் பயணம் மேற்கொண்டார்.
பின்னர் பஞ்சாப் சிர்கிந்து பகுதியில் பேசிய ராகுல், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்க யாரும் தயாராக இல்லை. அழுது கதறும் அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். அவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைக்கவில்லை. அவர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தொழிலதிபர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலங்கள் தான் விவசாயிகளுக்கு உணவளித்து வந்தது.
பாஜகவுக்கும், மோடிக்கும் ஓட்டுப் போட்டது தான் நாங்கள் செய்த தவறு என்று என்னிடம் கூறினர்.

பிரதமர் மேக் இன் இந்தியா பற்றி பேசுகிறார். ஆனால் விவசாயிகள் இல்லாமல் யாராலும் மேக் இன் இந்தியா முடியாது. ஏழைகளை உருவாக்குவதற்கு பெயர் தான் மேக் இன் இந்தியாவா? விவசாயிகளும் தொழிலாளர்களும் தான் இந்தியாவில் முதுகெலும்பு. அவர்களை வைத்து தான் மேக் இன் இந்தியாவை
தொடங்க முடியும். அவர்களுக்கு உரிய உரிமைகளும், நிவாரணங்களும் கிடைக்கும் வரை அவர்களுக்காக நான் போராடுவேன் என்றார் அவர்.
பஞ்சாப்பில் இருந்து டெல்லி
திரும்பிய ராகுல், விவசாயிகள் பிரச்சனைகள் பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனை ஏற்க நாடாளுமன்ற சபாநாயகர் மறுத்து விட்டார். மோடி அரசு
விவசாயிகளுக்கான அரசு அல்ல என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டினார்.

மேலும் நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் பேசுகையில், 'மத்திய அரசு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவில்லை. இதனால் அவர்கள் கடோமியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின்
பிரச்சனையில் இந்த அரசு கண்களை மூடிக் கொண்டிருக்கிறது,' என்றார். ராகுலின் இந்த பேச்சால் லோக்சபாவில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற மக்களவை சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :