வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 8 ஜூன் 2017 (14:57 IST)

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க சென்ற ராகுல் காந்தி கைது

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.


 

 
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலவரம் வெடித்து, போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 விவசாயிகள் மரணமடைந்தனர். அப்போது ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு விவசாயிகளுடன் போரில் உள்ளது என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 144 தடை உத்தரவை மீறி நுழைந்த முயன்றாதல் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் மாலை விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.