1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (18:06 IST)

ராகுல் காந்தி யாத்திரையில் கட்டில் சண்டை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க அனைத்தும் கட்சியினரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ராகுல் காந்தி தொடங்கியுள்ள பிரச்சார யாத்திரையின் முதல் நாளில் கட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது.


 

 
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய காட்சிகள் தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி ஏற்கனவே முதல்வர் வேட்பாளாரை அறிவித்து விட்டது.
 
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி உத்திரப்பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் தனது பெருமையான செயல்களை புகழ் பெற பரப்பி வருகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி வழக்கம் போல அவரது சுற்று பயணத்தை தொடங்கிவிட்டார்.
 
ராகுல் காந்தி 2,500 கி.மீ பிரச்சார யாத்திரையை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கினார். இந்த பயணத்தின் போது மக்களுடன் ராகுல் காந்தியும், காங்கிரசாரும் அமர்ந்து பேசுவதற்காக 100க்கும் மேற்பட்ட கட்டில்கள் கொண்டு வரப்பட்டன.
 
அங்கிருந்த ஆண்கள், பெண்கள் பலரும் காங்கிரசார் கொண்டு வந்திருந்த கட்டில்களை ஆளுக்கு ஒரு திசையில் தூக்கிக் கொண்டு ஓடினர். இதனால் அங்கு சற்று சிக்கலும் பதற்றமும் நீடித்தது.