17 வயதில் திருமணம், 22 வயதில் விவாகரத்து, 25 வயதில் கலெக்டர். ஒரு சாதனை பெண்ணின் பயணம்
ஒரு பெண் மன பலத்துடன் செயல்பட்டால் எவ்வளவு கடினமான பாதையையும் கடந்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனிதா பிரபா என்பவர்
10ஆம் வகுப்பில் 92 சதவீத மதிபெண்கள் எடுத்த அனிதா, மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவரது பெற்றோர் தங்களுடைய பாரம்பரியம் காரணமாக அவருக்கு அவரைவிட 10 வயது மூத்தவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
திருமண வாழ்க்கையுடன் தனது கனவையும் நினைவாக்கிய அனிதா, திருமணத்திற்கு பின்னர் பட்டப்படிப்பை முடித்து பின்னர் வன அதிகாரியாக தேர்வு பெற்றார். பின்னர் மீண்டும் தனது கடின உழைப்பின்மூலம் பொது சேவை ஆணைக்குழு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, தனது 25 வயதில் பெண்கள் பிரிவில் 17-ம் இடம் பிடித்து, டி.எஸ்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.
தனது வளர்ச்சிக்கு தடையாக இருந்த கணவரை விவாகரத்து செய்த அனிதா, தற்போது ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார். வெகுவிரைவில் கலெக்டராக ஆகவுள்ள அனிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.