பணம் கேட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்; 4 மணி நேரம் அடித்து கொடுமைப்படுத்திய இருவர் கைது
பெங்களூரைச் சேர்ந்த பாலியல் தொழில் செய்யும் பெண் ஒருவரை இரண்டு பேர் 4 மணி நேரம் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 16 வயதில் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன நான்கு மாதத்தில் அவரது கணவர் பிரிந்துவிட்ட நிலையில் அந்தப் பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.
இந்த பெண்ணுடன் அதுபா என்பவர் வழக்கமாக ரூ:1,000 கொடுத்து வந்து சென்றுள்ளார். கடந்த முறை அந்தப் பெண் கூடுதலாக ரூ:500 கேட்டுள்ளார். கொடுக்க மறுத்த அதுபா, இந்த விஷயத்தை தனது நண்பர் அப்சலிடம் பேசி தீர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து ரூ. 1,500 கொடுப்பதாக அந்தப் பெண்ணுக்கு அப்சல் உறுதியளித்து, பிடிஎம் லேஅவுட்டில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் உறவு வைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்த அதுபா அந்தப் பெண்ணை வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டுள்ளார்.
ஆனால், பணம் கொடுக்க மறுத்து சுமார் 4 மணி நேரம் அந்தப் பெண்ணை அடித்து, சிகரெட்டால் சூடு வைத்து, பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், அவரை வீடியோ எடுத்து, இணையத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் எம்ஐசிஓ லேஅவுட்டில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளத்துள்ளார். இவர் பாலியல் தொழில் செய்துவருவதாகவும், இந்தப் புகாரை பாலியல் வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அந்தப் பெண் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், அதுபா தொலைபேசியில் இருக்கும் பதிவுகளை மட்டும் அழித்துவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். எனினும் அந்தப் பெண் கொடுத்த புகாரின் கீழ் அதுபா மற்றும் அப்சல் இருவரையும் காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.