1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:32 IST)

பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

Priyanka Gandhi
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் விலைவாசி ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி நடு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் செய்தார் என்பதும் இதனையடுத்து காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தள்ளுமுள்ளு காரணமாக அவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது 
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.