வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (07:34 IST)

தாலியின் முக்கியத்துவம் மோடிக்கு தெரியுமா? பிரியங்கா காந்தி ஆவேசம்..!

தாலியின் முக்கியத்துவம் பிரதமர் மோடிக்கு தெரியுமா என்று பிரியங்கா காந்தி ஆவேசமாக தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என பிரதமர் மோடி பேசியதற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா காந்தியும் இதற்கு தனது பங்கிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் நேற்று கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார மேடையில் பேசியபோது வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய 600 விவசாயிகள் உயிரிழந்தனர், அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலி குறித்து பிரதமர் என்றைக்காவது யோசித்தாரா

மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக அடித்து செல்லப்பட்டார், அந்த பெண்ணின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா?  இன்று ஓட்டுக்காக இழிவான கருத்துக்களை பிரதமர் மோடி பேசி வருகிறார் என்று கூறினார்

மேலும் எனது பாட்டி தனது தாலியை நாட்டுக்காக கொடுத்தார், என் அம்மா தனது தாலியை தேசத்திற்காக தியாகம் செய்தார், தாலி முக்கியத்துவம் பிரதமர் மோடிக்கு எப்படி புரியும் என்றும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva