செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (08:44 IST)

பினராயி விஜயன் பாஜகவுடன் ரகசிய சமரசம் செய்து கொண்டார்: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!

Priyanka Gandhi
பினராயி விஜயன் மீதான எந்த குற்றச்சாட்டையும் பாஜக அரசு விசாரிக்கவில்லை என்றும் பாஜகவுடன் பினராயி விஜயன் ரகசிய சமரசம் செய்து கொண்டார் என்றும் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று கேரளாவில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது கால்பந்து விளையாட்டில் சமரசம் செய்து கொண்ட வீரரை வைத்துக் கொண்டு விளையாடி வெற்றி பெற முடியாது. அதுபோல்தான் சமரசம் செய்து கொண்ட ஒரு முதல்வரை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே பினராயி விஜயன் விமர்சனம் செய்கிறார், பாஜகவை அவர் விமர்சனம் செய்வதில்லை, முதல்வர் பினராயி விஜயன் மீதான எந்த குற்றச்சாட்டு குறித்தும் மதிய பாஜக அரசு விசாரணை செய்யவில்லை, சோதனை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே பினராயி விஜயன் பாஜகவுடன் ரகசிய சமரசம் செய்து கொண்டார் என்று தெரிவித்தார்

இதற்கு பதிலடி கொடுத்த பினராயி விஜயன் ’பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் காந்தி மீது நில முறைகேடு புகார் உள்ளது என்றும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தான் பாஜகவுக்கு 170 கோடி ரூபாய்  தேர்தல் பத்திரம் மூலம் வழங்கியுள்ளது என்றும் இதற்கு பிரியங்கா காந்தி பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva