கூகுள் தேடலில் பிரியங்கா சோப்ரா முதலிடம்


Abimukatheesh| Last Updated: புதன், 14 டிசம்பர் 2016 (20:59 IST)
2016ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா இடம் பெற்றுள்ளார். 


 
 
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்ற ஹாலிவுட் சிரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். அதோடு ஆஸ்கர் விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக இடம்பெற்றது மேலும் பிரபலம் அடையச் செய்தது.
 
அதோடு அடுத்த ஆண்டு வெளிவர காத்திருக்கும் பே வாட்ச் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக டுவைன் ஜான்சனுடன் நடித்தது அவரை அனைவரிடம் அடையாளப்படுத்தியது.
 
இந்நிலையில் 2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா இடம் பெற்றுள்ளார். ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர். அதில் குறிப்பாக பிரியங்கா சோப்ரா குறித்தே பெரும்பாலோனோர் தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :