திருப்பதியில் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: சாம்பவசிவ ராவ் தகவல்

திருப்பதியில் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி: சாம்பவசிவ ராவ் தகவல்


K.N.Vadivel| Last Modified திங்கள், 28 மார்ச் 2016 (01:10 IST)
திருமலை திருப்தி தேவஸ்தானம் சார்பில், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் மீனவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகி சாம்பவசிவ ராவ் தெரிவித்துள்ளார்.
 
 
இது குறித்து, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில், தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தலைமை செயல் அலுவலர் சாம்பசிவராவ் பேசுகையில், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் மீனவர்களுக்கும் தேவஸ்தானம் சார்பில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 
மேலும், இப்பயிற்சிகளுக்கு 4450 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முதல்  பயிற்சிகள் தொடங்கப்படும் என்றார். 


இதில் மேலும் படிக்கவும் :