1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (08:37 IST)

சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை - ஜனாதிபதி ஒப்புதல்

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 
நாட்டில் பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக குழந்தை வன்கொடுமை அதிகளவில் உள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் மேனகா தெரிவித்திருந்தார்.
 
12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அவசர சட்டம் மத்திய அனைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. 
இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.