1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 14 ஏப்ரல் 2021 (07:12 IST)

தேவேந்திரகுல வேளாளர் மசோதா: ஜனாதிபதி ஒப்புதல்

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் 
 
பட்டியல் பிரிவிலுள்ள ஏழு பிரிவினரையும் ஒருங்கிணைத்து ஒரே சமுதாயமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வந்த நிலையில் இந்த கோரிக்கையை மீதான ஆணையை சமீபத்தில் தமிழக அரசு பிறப்பித்தது
 
இதனையடுத்து இந்த மசோதா மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த நிலையில் மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது
 
இந்த நிலையில் இந்த மசோதா ஜனாதிபதியின் கையெழுத்துக்காக சென்ற நிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் இந்த மசோதாவில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது