குடியரசுத் தலைவர் ஆட்சி? குண்டு தூக்கி போட்ட பாஜக!
மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஆட்சியமைக்காப்படவிட்டால், குடியரசு தலைவர் ஆட்சிக்கு செல்லும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்த போதிலும் இரு கட்சிகளுக்கும் தனியாக தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. பாஜகவிற்கு முதல்வர் பதவியும் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியும் என பேச்சுவார்த்தை முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால், முதல்வர் பதவியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்க சிவசேனா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜக - சிவசேனா இடையே இழுபறி நிலவி வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஆட்சியமைக்காப்படவிட்டால், குடியரசு தலைவர் ஆட்சிக்கு மகாராஷ்டிரா செல்லும் என பாஜக மூத்த தலைவரும், எம்பியுமான சுதிர் முங்கன் திவார் தெரிவித்து அம்மாநில அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளார்.