தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஓப்புதல்...
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தை போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது.
அந்த சட்டத்தின் முன் வடிவு கடந்த 23ம் தேதி சட்டமன்ற பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளர். அவசர சட்டத்திற்கு எதிராக பல்வேறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதியின் ஒப்புதல் அளித்திருப்பது, தமிழக அரசிற்கு பலம் சேர்த்துள்ளது.