1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 23 அக்டோபர் 2021 (17:27 IST)

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பு மருந்து தயார்

குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பு மருந்து தயார் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின்  முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவைத் தடுக்க 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதற்கு ஐநா பாராட்டுகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பு மருந்து தயார் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தங்கள் மருந்து தொடர்பாக மருந்துக் கட்டுப்பாடு அமைப்பின் ஒப்புதலுக்கான காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.