வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (16:45 IST)

முஸ்லிம்கள் இரண்டு குழந்தைகள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்: பிரவீன் தொகாடியா சர்ச்சை பேச்சு

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பரவீன் தொகாடியா மீண்டும் முஸ்லிம்களின் மக்கள் தொகை குறித்து சர்ச்சை எழுப்பியிருக்கிறார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  ’அமைப்பாளார்’ பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையில் ”பாரதம்  400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்தது. ஆனால் நமது கலாச்சாரம் மற்றும் கட்டமைப்புகளை நிரந்தரமாக சேதமாக்கி  வைத்திருந்தது இந்த முஸ்லிம்களின் ஆட்சி. எனவே நாம் இப்பொழுது முஸ்லிம் மக்கள் தொகைக்கு எதிராக நிற்கவில்லை என்றால் விரைவில் பாரதம் ஒரு இஸ்லாமிய அரசாக மாறும்” என பிரவீன் தொகாடியா கூறினார். இரண்டு குழந்தைகள் விதிமுறையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம் குழந்தைகள் பிறக்கும்போது  மானியம் அளிப்பதை விட இரண்டு குழந்தைகள் பிறந்த பின் குடும்பகட்டுப்பாடு செய்ய அறிவுறுத்த வேண்டும். நாட்டின் வளர்ச்சி மற்றும்  கல்வி வளர்ச்சிக்கு இந்த மக்கள் தொகை வளர்ச்சி தடையாக இருக்கிறது என அவர்  கூறினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.