வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (16:17 IST)

பணத்திற்காக உடலுறுப்பு திருட்டு: தமிழக முதல்வருக்கு பின்ராயி விஜயன் கடிதம்!

கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு, அதற்கான கட்டணத்திற்காக உடலுறுப்பை திருடிய சேலம் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்தவர் கில்லிகுரிஷி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஓட்டுனரான இவர் 6 பேருடன் சேர்ந்து சென்னை வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர்களது வாகனம் விபத்துக்குள்ளானது. 
 
இதில் பலத்த காயமடந்த மணிகண்டம் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்தவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரது உறவினர்களிடம் கூறியுள்ளது. 
 
மேலும், சிகிச்சை எடுத்துக்கொண்டதற்கு கட்டணமாக ரூ.3.25 லட்சத்தை கேட்டுள்ளது. மணிகண்டனின் உறவினர்கள் பணமில்லை என கூற அவரது உடலுறுப்புகளை எடுத்துக்கொண்டு அவரது உடலை கொடுத்துள்ளது. 
 
இது குறித்து மணிகண்டனின் உறவினர்கள் கேரள முதல்வரிடம் முரையிட அவரும், இதனை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது பேஸ்புக் பக்கத்திலும், எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.