1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:23 IST)

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ மருத்துவமனை தகவல்

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது
 
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறிய அளவில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் நேற்று திடீரென்று பிரணாப் முகர்ஜி காலமாகி விட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது. இதனை அடுத்து பிரணாப் முகர்ஜியின் மகன் தனது தந்தை உயிருடன் இருப்பதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தயவுசெய்து இதுபோன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்
 
இந்த நிலையில் சற்று முன் ராணுவ மருத்துவமனை பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்த தகவலை அறிவித்துள்ளது. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்தை உதவியுடன்தான் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது