Daily Horoscope
✕

”நமக்கு தேவை சிலை அல்ல; வேலை தான்..” பாஜகவை வெளுத்து வாங்கும் பிரகாஷ் ராஜ்

Written By Arun Prasath
Updated: புதன், 22 ஜனவரி 2020 (13:53 IST)
தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயாரிப்பதை விட்டுவிட்டு வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் பட்டியலை தயார் செய்யலாம் என பாஜகவை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ”இந்த தேசத்திற்கு தேவை 3000 கோடி சிலை அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேட்டினை தயார் செய்வதை விட வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள் மற்றும் அடிப்படை கல்வியறிவு கூட பெறாத குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யவேண்டும்” என பாஜகவை விமர்சித்துள்ளார்.

மேலும் “போராட்டக்காரர்கள் மீது அரசு வன்முறையை ஏவினாலும், போராட்டக்காரர்கள் வன்முறையினை தவிர்த்து அறவழியில் போராட வேண்டும்” என பிரகாஷ் ராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

விஜய் ஆப்பு வைப்பார்!.. தனுஷ், சிவகார்த்திகேயன் நினைப்பது நடக்காது!..

4200 கோடியை என்னதான் பண்ணீங்க?!.. மேயர் பிரிவாவிடம் நேரில் கேட்ட விஷால்!..

அடுத்த 30 ஆண்டுகளுக்கு மத்தியில் ஆட்சி கட்டிலில் ஏற முடியாது.. ராகுல் காந்திக்கு அமித்ஷா சொன்ன மெசேஜ்...

இன்று இரவு கனமழை பெய்யும்: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..

அட்லாண்டிக் கடலுக்கு என் பேர வைங்க!.. டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த கூகுள் பிச்சை!...

அடுத்த கட்டுரையில்
Show comments