1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth.K
Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2023 (09:42 IST)

“என் ஜோக் உங்களுக்கு புரியலைன்னா.. வளருங்கள்!” – விமர்சனங்களுக்கு பிரகாஷ் ராஜ் பதில்!

Prakash Raj
சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்குவதை தொடர்பு படுத்தி பிரகாஷ்ராஜ் கிண்டலாக இட்ட பதிவு சர்ச்சையாகியுள்ள நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.



இஸ்ரோவின் சந்திரயான் – 3 நிலவில் கால்பதிக்க உள்ளதை இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ் “ப்ரேக்கிங் நியூஸ்: விக்ரம் லேண்டர் நிலவில் எடுத்த முதல் புகைப்படம்” என்று பதிவிட்டு ஒருவர் டீ ஆற்றும் கார்ட்டூன் படத்தை பகிர்ந்திருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரகாஷ் ராஜின் பதிவில் பலரும் “நீங்கள் அரசியல் சார்பில் ஒரு நிலையில் இருக்கலாம். அதற்காக இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பை கிண்டல் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது” என்றும், “சந்திரயான் – 3 உழைப்பை கிண்டல் செய்யும் அளவிற்கு மோடி வெறுப்பில் கண்மூடித்தனமாக உள்ளீர்களா?” என்றும் கேள்விகளை எழுப்பினர்.

அவர்களுக்கு பதில் அளிக்கு விதமாக பதிவிட்டுள்ள பிரகாஷ்ராஜ் “வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையை குறிப்பிடுகிறேன். அதன் வகையில் கேரளா தேநீர் கடைக்காரர்களை நான் கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை. வளருங்கள்” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நிலவில் பாட்டி வடை சுட்டு விற்பதாக ஒரு கதை இருப்பது போல, கேரளாவில் ’உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்’ என்ற சொலவடை உண்டு. அதை மையப்படுத்திதான் பிரகாஷ் ராஜ் அதை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Edit by Prasanth.K